திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:46 IST)

நடிகராக அறிமுகமாகும் பிரபு சாலமன்…. எந்த படத்தில் தெரியுமா?

இயக்குனர் பிரபுசாலமன் மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ  தயாரிக்கும் அடுத்த படத்தில் அதர்வா முரளியின் சகோதரரான ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்க உள்ளார்.  இவர் சேவியர் பிரிட்டோவின் மகளின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடித்த ஆரம்பம், பில்லா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இந்த விஷ்ணுவர்த்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தனது மருமகனை தமிழ் திரையுலகில் ஒரு ஹீரோவாக்கும் முயற்சியில் சேவியர் பிரிட்டோ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரபு சாலமன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.