புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (17:12 IST)

பிரபாஸின் அடுத்த பட ஷூட்டிங் தொடக்கம்..!

நடிகர் பிரபாஸின் 21 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்போது மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ராஷிகண்ணா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ராஷி கண்ணா இந்த படத்தின் மூலம் இந்தியா முழுக்க வெளிச்சம் கிடைக்கும் என்பதால் சிறிய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டுள்ளார். அவர் முதல் காட்சியில் நடிக்க பிரபாஸ் அவருக்கு கிளாப் அடித்துள்ளார்.