ஜோடியாக சீனா செல்லும் பிரபாஸ், அனுஷ்கா
சீனாவில் ஜூலை மாதம் ரிலீஸாக உள்ல பாகுபலி படத்தின் விளம்பரத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தை சீனாவில் வெளியிட உள்ளனர். பாகுபலி முதல் பாகம் சீனாவில் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை மாதம் பாகுபலி 2 சீனாவில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர். இந்த ஜோடி ரசிகர்கள் பிடித்து போக இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக வேண்டுமென்று ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
பின் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது. இதையடுத்து அனுஷ்கா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து யாரவது வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என எச்சரிக்கையும் விடுத்தார்.
தற்போது சீனாவில் பாகுபலி 2 படத்தை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்க்னவே தங்கல் திரைப்படம் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. அதேபோன்று பாகுபலி 2 திரைப்படமும் சீனாவில் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.