1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:43 IST)

எனக்கு அவரை தெரியாது என்றாலும் இரங்கல் தெரிவிக்கின்றேன்: பூஜா ஹெக்டே!

எனக்கு அவரைத் தெரியாது என்றாலும் அவருடைய மறைவிற்கு நான் இரங்கல் தெரிவிக்கின்றேன் என பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பாலிவுட் நடிகருமான சித்தார்த் ஷாகுல் என்பவர் இன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். 40 வயதான அவருடைய மறைவு பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சி அடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து கூறிய போது சித்தார்த் ஷாகுல் அவர்களை எனக்கு நேரடியாக தெரியாது இருந்தாலும் இவ்வளவு இளம் வயதில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் 
 
அவருடைய இழப்பை தாங்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினருக்கு சக்தி கொடுக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பூஜா மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் சித்தார்த் சாகுல் மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது