வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (14:58 IST)

பொங்கல் போட்டிக்கு சந்தானமும் தயார்

பொங்கலுக்கு விஜய்யின் பைரவா வெளியாகிறது. இதன் காரணமாக சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கலை தவிர்த்து வருகின்றன.

 
இந்நிலையில் விஷாலின் கத்தி சண்டை பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்து உறுதி செய்துள்ளனர். இதனால் இருமுனை போட்டி உறுதியாகியுள்ளது.
 
தற்போது சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தையும் பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் மும்முனை போட்டிக்கு பொங்கல் களம் தயாராகிறது.
 
பொங்கல் நெருங்கும் போது இன்னும் சில படங்கள் போட்டியில் குதிக்கலாம். போலவே, இதில் ஒன்றிரண்டு படங்களில் போட்டியிலிருந்து விலகவும் செய்யலாம்.