செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:39 IST)

'லியோ' வெற்றி விழா கொண்டாட்டம்.. காவல்துறையின் திடீர் கட்டுப்பாடு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெற்றி விழா குறித்து சில தகவல்களை காவல்துறையினர் கேட்டு 'லியோ' படக்குழுவினர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை எழுதிய கடிதத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடையும்? எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா ? பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல் துறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் லியோ வெற்றி விழாவில் 5000 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்  எனவும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva