வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (18:59 IST)

பாரதிராஜாவை கண்ணீர் விட வைத்த இயக்குனர் ராம்.....

இயக்குனர் ராம் இயக்கிய 'பேரன்பு' படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா பல காட்சிகளில் கண்கள் கலங்கி விட்டாராம். 


 

 
‘கற்றது தமிழ்’ படம் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர் இயக்குனர் ராம்.  அதன்பின் ‘தங்க மீன்கள்’ படத்தில் மகளுக்கும், ஒரு தந்தைக்குமான பாசத்தை பதிவு செய்தார். அதன்பின் அவர் ‘தரமணி’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
 
எனவே, பேரன்பு என்ற படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். அதில் நடிகர் மம்முட்டி மற்றும் தங்க மீன்கள் படத்தில் நடித்த சிறுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை கேட்ட போதே கண்கள் கலங்கிய மம்முட்டி, மலையாள படங்களுக்கு ஒதுக்கிய கால்ஷீட்டை இந்த படத்திற்கு ஒதுக்கி நடித்துக் கொடுத்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.
 
இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜாவிற்கு சமீபத்தில் இயக்குனர் ராம் திரையிட்டு காண்பித்தார். பல காட்சிகளில் மம்முட்டியின் நடிப்பை பார்த்து கண்கலங்கிய பாரதிராஜா, படம் முடிந்து வெளியே வரும் போது, இயக்குனர் ராமின் கரங்களை பிடித்து நெகிழ்ந்து பாராட்டினாராம்.
 
‘பேரன்பு’திரைப்படம் பல சினிமா ரசிகர்களை கலங்கடிக்கும் எனத் தெரிகிறது.