வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (20:41 IST)

நயன்தாரா படத்தின் 2 வது பாகம்…இயக்குநர் கூறிய தகவல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் அம்ம் வேடத்தில் நடித்துள்ள நயன் தாரா நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் காதில் எதோ ஒன்று சொல்வார். அது என்ன என்று யாருக்கும் புரியாது.

இதுகுறித்து இன்று ஒரு ரசிகர் சமூகவலைதளத்தில் ஆர்.ஜே.பாலஜியிடம் கேள்வி எழுப்பினார். அதில், கடைசி வரைக்கும் இது என்னவென்று சொல்லவில்லை எனக்கூறி நயன்தாரா நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் காதில் எதோ ஒன்று சொல்லும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அதற்கு அவர், பார்ட்-2 ல் இதற்காக விளக்கத்தைச் சொல்லுகிறோம் எனக் கூறியுள்ளார்.