பாண்டிராஜ் வசனத்தில் உருவாகும் விமல் படம்
விமல் புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படத்தை ராஜதந்திரம் அமித் இயக்குகிறார். இரண்டாவது படத்தை இயக்குகிறவர் சிவா.
சுசீந்திரனின் உதவி இயக்குனரான சிவா இயக்கும் முதல் படம் இது. இந்தப் படத்துக்கு பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் விரைவில் தொடங்க உள்ளது.