செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (09:25 IST)

முதல் முறையாக பா ரஞ்சித்துடன் இணையும் ஜி வி பிரகாஷ்…. வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தலைப்பை வைத்து இந்த திரைப்படம் ஸ்போர்ட்ஸ் ஜானராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து படத்தின் பூஜை நாளை சென்னை NFDC உள்ள தாகூர் பிலிம் செண்டரில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு சில மாதங்கள் கழித்து பின்னர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக முதன் முதலாக இயக்குனர் பா ரஞ்சித்துடன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இணைகிறார். இதுவரை பா ரஞ்சித் தன்னுடைய படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை பயன்படுத்தி வந்தார். கடைசியாக அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்துக்கு தென்மா இசையமைப்பாளராக பணியாற்றினார். இந்நிலையில் விக்ரம் 61 படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.