புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (10:00 IST)

தேவுடா..! சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினி இல்லையா?

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி. நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெறவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து சந்திரமுகியின் இரண்டாம் பாகமாக அப்தரக்‌ஷகா என்ற படத்தை 2010ல் இயக்கினார் பி.வாசு.

தற்போது அந்த படத்தை தமிழில் சந்திரமுகி 2 என்னும் பெயரில் ரீமேக் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். நாகவள்ளி (தெலுங்கு சந்திரமுகி) மீண்டும் ஓவியம் மூலமாக ஒரு பெண்ணின் உடம்பில் செல்ல, ராமசந்திர ஆச்சார்யா அதை விரட்டுவதற்காக டாக்டர்.ஸ்ரீநாத் (தமிழில் டாக்டர்.சரவணன்) உதவியை நாடுவதாக அந்த கதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கும் நிலையில் டாக்டர்.சரவணன் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பிரபல புது நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பி.வாசு தரப்பில் பேசப்பட்டு வருகிறதாம்.