செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:49 IST)

லெஸ்பியனாக மாறும் ஓவியா?

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவிற்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஓவியாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
 
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து குளிர் 100 படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் உருவாக உள்ள 90 எம்.எல் படத்தில் நடிக்கிறார்.
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது. சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சிம்பு இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
 
இந்த படத்தில் ஓவியா லெஸ்பியனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓவியா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிப்பது வரவேற்கத்தக்கது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஓரினச்சேர்க்கையாளர்களை கேலி செய்தே காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்று வருகிறது.
 
இந்நிலையில் சினிமாவின் மைய நீரோட்டமாக விளங்கும் வர்த்தக சினிமாவில் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி திரைப்படம் எடுப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.