யோகி பாபுவோடு நடிக்கும் புதிய படம்… வெளியான அறிவிப்பு!
நடிகை ஓவியா மற்றும் யோகி பாபு ஆகியோர் ஒன்றிணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியதே வீட்டுக்குள் இருந்த ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரின் காதல்தான். ஆனால் ஒரு கட்டத்தில் ஓவியாவை ஆரவ் விலக்க மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா பாதியிலேயே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் ஓவியாவை பிரபலமாக்கியதே பிக்பாஸ்தான். ஆனால் அந்த பிரபலத்தின் மூலம் அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் யோகி பாபுவோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் தொடக்க விழா போஸ்டரை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.