திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (06:14 IST)

பிக்பாஸ் வேண்டாம், நாங்கள் 'களவாணி' படம் பார்க்க போகிறோம்: ஓவியா ஆர்மி அதிரடி

கமல்ஹாசன் விஜய்டிவியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் இதுநாள் வரை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஓவியாவின் காட்சிகள் இருட்டடிக்கப்பட்டு காயத்ரிக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சி திசை மாறி வருகிறது.



 
 
ஓவியாவை சரியாக நிகழ்ச்சியில் பார்க்க முடிவதில்லை, அப்படியே பார்த்தாலும் அவர் அழும் காட்சிதான் வருகிறது. காயத்ரியை தியாகி போலவும், உத்தமி போலவும் காட்டி வரும் விஜய் டிவி ஓவியாவை மட்டும் அழுகாச்சியாக காட்டுவது ஏன் என்று ஓவியா ஆர்மியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
நாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதே ஓவியாவுக்காகத்தான். ஓவியா ஓரங்கட்டப்பட்டால் இனிமேல் பிக்பாஸ் பார்ப்பதற்கு பதிலாக தினந்தோறும் 'களவாணி' படத்தை பார்க்க போய்விடுவோம் என்று டுவிட்டரில் ஓவியா ஆர்மியினர் மிரட்டியுள்ளனர். இதனால் விஜய் டிவி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.