வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (16:19 IST)

ஓவியா-ஆரவ் நெருக்கமாக இருக்கும் ஒரு வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து குளிர் 100 படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் உருவாக உள்ள 90 எம்.எல்  படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியா, ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரது காதலை ஏற்க மறுத்ததால் தற்கொலை முயற்சி வரை  சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் மன அழுத்தம் அதிகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலேயே சென்றுவிட்டார் ஓவியா.
 
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஓவியா மற்றும் ஆரவ் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்தை ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை ரசிகர்கள் அதிகளவில்  லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.