இந்த வருட ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான் விருது பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஒரிஜினல் இசை மற்றும் பாடல் பிரிவில் ரஹ்மான் ஆஸ்கர் வென்றார். இந்த வருடம், அவர் இசையமைத்த பீலே - பெர்த்த ஆஃப் ஏ லெஜென்ட் திரைப்படமும் இவ்விரு பிரிவுகளில் போட்டியிட்டது.
ஆனால், இறுதிப்பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் படம் இடம்பெறவில்லை. அதனால், பரிசு பெறும் வாய்ப்பை ரஹ்மான் இழந்தார். இசைப்புயல் இந்தமுறையும் ஆஸ்கர் தட்டிச் செல்வார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.