ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (10:31 IST)

சிகிச்சைக்காக மட்டும்தான் அமெரிக்கா செல்கிறாரா ரஜினி?

இன்னும் ஒரு வாரத்தில், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி என்று கூறப்படுகிறது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த  மாதம் 28ஆம் தேதி தொடங்கிய ரஜினி, தொடர்ச்சியாக 12 நாட்கள் நடித்தார். அதன்பிறகு தனக்கு காட்சிகள் எதுவும்  இல்லாததால் சென்னைக்குத் திரும்பிய ரஜினி, இன்று முதல் மறுபடியும் நடிக்கிறார். ஒரு வாரம் படப்பிடிப்பில்  கலந்துகொள்ளும் ரஜினி, 25ஆம் தேதி அங்கு நடைபெறக்கூடிய ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தின் இசை  வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
 
ஒரு வாரத்துக்குப் பின், அங்கிருந்தே அமெரிக்கா செல்கிறார் என்று கூறப்படுகிறது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் ரஜினி, அமெரிக்காவிலேயே சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்கிறார்கள். ஆனால், அரசியல் பிரவேசம் ஆலோசனை செய்யவே அமெரிக்கா செல்கிறார் என்று சிலர் கிசுகிசுக்கின்றனர். அரசியல் தலைவர்களுடன் இந்தியாவுக்குள் சந்தித்தால் மீடியாக்கள் மோப்பம் பிடித்துவிடும் என்பதால், இந்த ஏற்பாடாம்.