ஒரு கோடி சர்ச்சைக்கு ரஜினி அண்ணன் முற்றுப்புள்ளி
ஒரு கோடி சர்ச்சைக்கு ரஜினி அண்ணன் முற்றுப்புள்ளி
நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்ன ரஜினி, அதனை உடனே தரவேண்டும், இல்லாவிடில் அவரது வீட்டுமுன் போராட்டம் நடத்துவோம் என விவாயசாயிகள் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், தஞ்சாவூரில் ரஜினியின் உடல்நலத்திற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா, ரஜினி ஒரு கோடி ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக அப்போதே ஒதுக்கி விட்டார். நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் போது அதனை அவர் தருவார் என ஒரு கோடி ரூபாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆமா, நதிநீர் இணைப்புக்கான வேலை அடுத்த நூற்றாண்டிலாவது தொடங்கப்படுமா?