இன்று வெளியாகும் NTR 30 படத்தின் முதல் லுக் போஸ்டர்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆர் 30 என்ற படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. RRR படத்துக்குப் பிறகு ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.