வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (16:15 IST)

நடிகர் சங்க கட்டிட விவகாரம்; விஷாலுக்கு சாதகமாக அமைந்த ஆய்வறிக்கை

பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படவில்லை என ஆய்வுக் குழுவின் வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


 


 
நடிகர் சங்க கட்டிடம் அடிகள் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் கட்டிடம் கட்டும் இடத்தில் 33 அடி பொதுசாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்க கட்டிடம் அமைய இருக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவனுக்கு உத்தரவிட்டது. ஆய்வு அறிக்கையை சம்ர்பிக்கும் வரை கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் ஆய்வு அறிக்கையை சமர்பித்தார். அதில், நடிகர் சங்க கட்டிடத்தில் விதிமீறல்கள் இல்லை. பொது சாலை ஆக்கிரமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
 
இதனால் விஷால் தற்போது பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இனி நடிகர் சங்க கட்டிட கட்டுமானப் பணி எந்த ஒரு தடையும் இல்லாமல் நடைப்பெறும்.