1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (19:47 IST)

விஜய்க்கு ஜோடியாகும் ‘ஒருநாள் கூத்து’ நடிகை......

விஜய் ஜோடியாக ‘ஒருநாள் கூத்து’ ஹீரோயின் நிவேதா பெத்துராஜ் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.


 
 
மாடலாக இருந்த நிவேதா பெத்துராஜ், ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிதாக ஓடாவிட்டாலும், அதில் இடம்பெற்ற ‘அடியே அழகே…’ பாடல், இளைஞர்களின் மனதில் அவரை நங்கூரம் போட்டு நிறுத்தியது.

அதன்பின்னர், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்துள்ள நிவேதா, ஜெயம் ரவி ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ படத்திலும், வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், தனக்குப் பிடித்த நடிகர் விஜய் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், “விரைவில் விஜய் சாருடன் சேர்ந்து நடிப்பாய். உன்னுடைய கனவு நனவாகும்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார், விஜய்யின் ‘மெர்சல்’ பட தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி. தயாரிப்பாளரே இப்படி சொன்னதால், விரைவில் விஜய்யுடன் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேரலாம் என்கிறார்கள்.