வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (09:29 IST)

காணாமல் போகும் நண்பர்களும், பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் "நேற்று இந்த நேரம்"

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்". 
 
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.
 
மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. 
 
கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.ந மேற்கொண்டுள்ளனர். 
 
நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.
 
இப்படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.