புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:49 IST)

இன்று வெளியாகிறது நெற்றிக்கண் டைட்டில் பாடல்! – வழக்கம் போல வரிகள் எழுதிய இயக்குனர்!

நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள நெற்றிக்கண் படத்தின் பாடல் இன்று வெளியாகிறது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஆகஸ்டு 13 அன்று வெளியாகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் பாடல் காலை 12.15 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகள் எழுதியுள்ளார்.