வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:16 IST)

சினிமா இயக்கவேண்டும் என ஆசைப்படுபவர்கள் அந்த சீரிஸைக் கண்டிப்பாக பார்க்கவேண்டும் – நெல்சன் பரிந்துரை!

தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.

அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு ‘டாக்டர்’ மற்றும் விஜய்யோடு ‘பீஸ்ட்’ மற்றும் ரஜினியோடு ‘ஜெயிலர்’ என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கும் அவர் சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனக்கு மிகவும் பிடித்த தனது படங்களில் அடிக்கடி வரும் Breaking bad சீரிஸ் பற்றி பேசும்போது “எனக்கு மிகவும் பிடித்த சீரிஸ் அது. திரைப்படத்துறைக்குள் வர நினைப்பவர்கள் அனைவருமே அந்த சீரிஸைப் பார்க்கவேண்டும். அதன் திரைக்கதைக்காகவும், மேக்கிங்காகவும் அதை திரும்ப திரும்ப பார்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.