1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam (Murugan)
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2017 (14:13 IST)

அம்மாடியோவ்… நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா?

சமீபத்தில் வெளியான விளம்பரப் படத்தில் நடித்ததற்காக, நயனுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. 


 

 
இன்றைய நிலையில், தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா மட்டும்தான். ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த நயன், ‘சங்கமித்ரா’ படத்துக்காக 4 கோடி ரூபாய் வரை கேட்டுள்ளார். ஆனால், அந்த சம்பளத்தைக் கொடுக்க முடியவில்லை என்பதால், பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போகிறது.
 
சம்பளம் அதிகமாக இருந்தால், சின்ன நடிகர்களுடன் கூட சேர்ந்து நடிப்பார் நயன் என்றொரு பேச்சும் இண்டஸ்ட்ரியில் உண்டு. அப்படித்தான் ஆரி, சிவகார்த்திகேயன் கூட நடிக்க ஒப்புக் கொண்டார் என்பார்கள். இந்நிலையில், விளம்பரப்படம் ஒன்றுக்காக 5 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது. டாடா ஸ்கையின் டிடிஹெச் விளம்பரம்தான் அது.