1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (13:59 IST)

புதிய படங்களை ஒப்பு கொள்ளாத நயன்தாரா? குழந்தை பெற்று கொள்ள திட்டமா?

Nayanthara
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புதிய திரைப்படங்களை ஒப்புக் கொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததை அடுத்து அவர் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகி விட்டதாக கூறப்படுகிறது 
 
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் கோல்ட் மற்றும் மாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிவரும் ‘கனெக்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 
 
அதுமட்டுமின்றி அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்திலும் ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்
 
இந்த படங்களை முடித்த பின்னர் நயன்தாரா புதிய திரைப்படங்களில் ஒப்புக் கொள்ளமாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது
 
இதனையடுத்து அவர் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் ரவுடி பிக்சர்ஸ் சார்பாக படங்களை தயாரிப்பதில் மட்டுமே ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran