சிம்புவின் ‘தொட்டி ஜெயா’ படத்தில் நயன்தாரா: மிஸ் ஆனது எப்படி?
சிம்புவின் தொட்டி ஜெயா என்ற திரைப்படத்தில் தான் நயன்தாரா அறிமுகமாக இருந்தார் என்றும் ஆனால் ஒரு சில காரணங்களால் மிஸ் ஆகி விட்டதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்
தொட்டி ஜெயா படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்ததாகவும் இதற்காக கேரளாவில் இருக்கும் நயன்தாராவை சந்திக்க இயக்குனர் துரை மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த சென்றதாகவும் கூறினார்
ஆனால் கேரளா சென்ற போது அங்கு ஃபோர் பீப்பிள் என்ற படத்தை அவர்கள் பார்த்த போது அந்த படத்தின் நாயகி கோபிகா இந்த படத்தின் கேரக்டருக்கு சரியாக இருப்பார் என்று கருதியதால் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கோபிகா வீட்டிற்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஒப்பந்தம் செய்து விட்டதாக கூறியுள்ளார்
ஒரு வேளை திட்டமிட்டபடி நயன்தாராவிடம் இயக்குனர் துரை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அந்த படத்தில் தான் நயன்தாரா அறிமுகமாகி இருப்பார் என்றும் அவர் கூறியிருந்தார். அதன்பின் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் நயன்தாரா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது