ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 28 ஜூன் 2017 (20:33 IST)

சென்னை வேண்டாம்! பெங்களூருக்கு மாற்றுங்கள்: இயக்குனருக்கு நயன்தாரா கட்டளை?

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.



 

 
 
இந்த படத்தின் கிளைமாக்ஸ் மெட்ரோ ரயில் ஒன்றில் அதிரடி ஆக்சன் காட்சியாக திரைக்கதையின்படி உள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பேசி அதற்கான அனுமதியையும் படக்குழுவினர் பெற்றுவிட்டனர்.
 
ஆனால் நயன்தாரா சென்னை மெட்ரோ ரயில் வேண்டாம் என்றும், சென்னையில் ரசிகர்கள் அதிகம் குவிந்து விடும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே பெங்களூர் மெட்ரோ ரயிலில் கிளைமாக்ஸை மாற்றி கொள்ளவும் இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். இதனால் இயக்குனர் வேறு வழியின்றி பெங்களூர் மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் தற்போது பேசி வருகிறார்.