திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:46 IST)

29 ஆண்டுகளை நிறைவு செய்த நாட்டாமை…!

தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று நாட்டாமை. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நடித்தனர். இதில் மீனாதான் கதாநாயகி என்றாலும் குஷ்பு ஒரு குணச்சித்திர நடிகை போலதான் நடித்திருந்தார். இந்த படம் வெளியான போது அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. படத்தில் இடம்பெற்ற கவுண்டமனி செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர்தான் தமிழ் சினிமாவில் முன்னணிக் கதாநாயகர் ஆனார் சரத்குமார். அந்த அளவுக்கு பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டானது இந்த திரைப்படம். இப்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது இந்த படத்தை முழுவதும் பார்க்க ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படம் ரிலீஸாகி 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இந்த படத்தைப் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.