1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (15:16 IST)

மாஸ் மசாலா படமாக வந்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை… நானிக்கும் ஒரு ஹிட் கொடுத்த எஸ் ஜே சூர்யா!

நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படம் நேற்று ரிலீஸாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியானது.

மாஸ் மசாலா ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் வெகுஜன சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் கோபப்படும் ஆக்ரோஷ இளைஞராக நானி இந்த படத்தில் நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக எஸ் ஜே சூர்யா வழக்கம் போல அப்லாஸ் அள்ளுகிறார்.

வழக்கமான கிளிஷே தனங்கள் கொண்ட படம்தான் என்றாலும் அதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சொன்ன விதத்தில் இந்த படம் வெற்றி பெற்றுள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க தொடங்கியுள்ளது.