செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (14:16 IST)

சாஹோ இயக்குனரின் அடுத்த படத்தில் நானி…!

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள்தான் இப்போது முன்னணியில் இருந்து வருகின்றனர். அதில் எந்த பின்புலமும் இல்லாமல் வந்து முன்னணிக்கு வந்துள்ள நடிகராக நானி உள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ஜெர்சி மற்றும் தசரா போன்ற படங்கள் பெருவெற்றி பெற்றன.

அதையடுத்து இப்போது நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை டிவிவி தானய்யா தயாரிக்கிறார்.

இதே நிறுவனத்துக்காக நானி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சாஹோ படத்தை இயக்கிய சுஜித் இயக்க உள்ளார். வன்முறையை தனது வழியாக கொண்ட ஒருவன் அகிம்சைக்கு மாறினால் எப்படி அவன் உலகம் தலைகீழாக மாறுகிறது என்பதைப் பற்றிய கதைக்களமாக உருவாக்கியுள்ளாராம் சுஜித்.

சுஜித் இப்போது பவன் கல்யாண் நடிக்கும் ஓஜி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தபின்னர் அவர் நானி நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.