புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (20:11 IST)

முதலமைச்சர் கனவு இருக்கக்கூடாது: உதயநிதிக்கு மறைமுக அறிவுரை கூறினாரா மிஷ்கின்?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தை புரமோஷன் செய்யும் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் குழுவினர் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 
 
இந்த கலந்துரையாடலில் மிஸ்கின் தனக்கு அருகே உட்கார்ந்திருந்த ஒரு இளைஞரைப் பார்த்து, ‘உனக்கு முதலமைச்சராகும் கனவு வரக்கூடாது, நல்ல நடிகனாக மட்டும் இருக்க வேண்டும். ஒரு நல்ல நடிகனாக இருந்தாலே தமிழகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். எந்த காரணத்தை முன்னிட்டும் அரசியலுக்கு வந்து முதலமைச்சராகி விடாதே என்று கூறினார்
 
அப்போது உதயநிதி ’இந்த அறிவுரையை அவருக்கு சொல்கிறீர்களா? அல்லது எனக்கு சொல்கிறீர்களா? எனக் கேட்க அதற்கு மிஸ்கின் ’நீங்கள் அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் நான் உங்களை சொல்ல முடியாது, சொல்ல மாட்டேன்’ என்று கூற அந்த இடமே கலகலப்பானது. 
 
உதயநிதியை தான் மிஸ்கின் மறைமுகமாக சொல்வதாக சமூக பயனாளிகள் குறிப்பிட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது