1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (14:58 IST)

நடிகை கஸ்தூரி குசும்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ தான் என் ஹீரோ!

நடிகை கஸ்தூரி குசும்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ தான் என் ஹீரோ!

தெர்மாக்கோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் ஆகியோர் தான் என்னுடைய ஃபேவரேட் ஹீரோ என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


 
 
நடிகை கஸ்தூரி சமீப காலமாக டுவிட்டரில் படு பிஸியாக செயல்படுகிறார். அரசியல், சினிமா என கலந்துகட்டி கருத்துக்களை கூறி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் நடிகை கஸ்தூரி. சமீபத்தில் பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டல் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக டுவிட்டரில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.


 
 
இந்நிலையில் தற்போது கஸ்தூரி குசும்பாக ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், தனக்கு பிடித்த ஹீரோக்கள் யார் என பலர் கேட்கிறார்களாம். இதற்கு பதில் அளித்துள்ள கஸ்தூரி, சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தான் தன்னுடைய ஹீரோ என கூறி அவர்களது புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.