என் கலை வாழ்வு நீள வேண்டும் - கமல்
நவம்பர் 7 கமலின் பிறந்த நாள். அனைத்து பிறந்த நாளின் போதும், ரசிகர்களை சந்திப்பதையும், நற்பணி விழாக்களில் பங்குபெறுவதையும் வழக்கமாக கொண்டிருப்பவர்.
இந்தமுறை முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொண்டார். அவருக்கு ரசிகர்களும், சக கலைஞர்களும் போனிலும், இணையத்திலும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கு கமல் ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார்.
அன்பு ரசிகர்கட்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.