1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (08:26 IST)

'விவேகம்' படத்திற்காக விட்டு கொடுத்த விஜய்

சமீபத்தில் வெளியான 'விவேகம்' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருபவர்களில் விஜய் ரசிகர்களுக்கும் பெரும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 'விவேகம்' படத்திற்காக விஜய் விட்டு கொடுத்த ஒரு செய்தி தற்போது வெளிவந்துள்ளது.



 
 
விவேகம்' படத்தின் ரிலீசுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் 'மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இசை வெளியீட்டுக்கு அடுத்த இரண்டு நாளில் அந்த படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் 'விவேகம்' படத்தின் ரிலீஸ் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டதாம்.
 
அதேபோல் மெர்சல் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆன தினத்தில் தான் விவேகம் படத்தின் டிரைலரை விட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென டிரைலரின் தேதியை மாற்றிவிட்டனர்.
 
இவ்வாறும் அஜித்தும்,  விஜய்யும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது போல் அவர்களுடைய ரசிகர்களும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை கடைபிடித்தால் இருதரப்பிற்கும் நன்மை பயக்கும் என்பதே அனைவரின் ஆசை.