திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (13:24 IST)

மகன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை 29 நாட்களில் முடித்த முத்தையா!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம்.  இந்த படம் கடந்த மாதம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்த இந்த திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரிகிடா சகா மற்றும் தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். முத்தையாவின் மற்ற படங்களைப் போலவே மதுரையைக் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய 29 நாட்களில் மொத்த ஷூட்டிங்கையும் முத்தையா நிறைவு செய்துள்ளாராம். விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.