முள்ளும் மலரையும் தாண்டிய நடிப்பு - ரஞ்சித் பெருமிதம்
முள்ளும் மலரையும் தாண்டிய நடிப்பு - ரஞ்சித் பெருமிதம்
கபாலி படத்தின் தெலுங்குப் பாடல்களை வெளியிட்டுள்ளனர். அதனை முன்னிட்டு நிருபர்களின் கேள்விகளுக்கு ரஞ்சித் பதிலளித்தார்.
கபாலி குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், கபாலி ஒரு ஆக்ஷன் படம் என்று சொல்கிறார்கள். ஆக்ஷனைத்தாண்டிய உணர்ச்சிகரமான படம் இது என்றார். ரஜினியின் சிறந்த நடிப்பு முள்ளும் மலரும் படம்தான். கபாலியில் அதையும் தாண்டி ரஜினி நடித்துள்ளார் என்றார்.
கபாலியில் ரஜினி புரட்சியாளராகவும், மக்களை காப்பாற்றும் டானாகவும் நடித்திருப்பதாகவும் அவர் கூறினார்.