ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:58 IST)

முடிஞ்சா இவன புடி கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியீடு

முடிஞ்சா இவன புடி கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியீடு

சுதீப் நடிப்பில் வெளிவந்த ‘முடிஞ்சா இவன புடி’ படம் வரும் வெள்ளிக்கிழமை முதல் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

 

 
 
கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் வெளிவந்துள்ள முடிஞ்சா இவன புடி படத்தில் நித்யா மேனன் நாயகி. டி. இமான் இசை, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. இப்படத்திற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
இப்படத்தின் வசூல் கன்னடத்தில் மட்டும் நான்கு நாட்களில் 18 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சுதீப், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு ராஜ ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம்பாபு புரொடாக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.பாபு தயாரித்துள்ளார்.