’மூக்குத்தி அம்மன் 2’ பூஜை, படப்பிடிப்பு எப்போது? பரபரப்பு தகவல்..!
நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் "மூக்குத்தி அம்மன்" படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான "மூக்குத்தி அம்மன்" மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மன் ஆக நடிக்க இருப்பதாகவும், சுந்தர் சி இயக்குநராக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை மார்ச் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அன்றே படப்பிடிப்பும் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில், இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva