1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (10:21 IST)

ஆதிபுருஷ்' காட்சியின்போது திரையரங்கிற்குள் வந்த குரங்கு: அனுமனே வந்ததாக ஆரவாரம்..!

பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாயிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
ஒருசிலர் இந்த படம் நன்றாக இருப்பதாகவும் ஒரு சிலர் படம் மோசமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த படம் வெளியாகும் திரையரங்கில் ஒரு இருக்கை அனுமனுக்காக காலியாக விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆதிபுருஷ்' படத்தின் காட்சியின் போது திடீரென திரையரங்கில் குரங்கு வந்ததாகவும், உடனே அனுமனே படம் பார்க்க வந்ததாக கருதிய ரசிகர்கள்  ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை பாடி ஆரவாரம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன 
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran