வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:44 IST)

மீடியாவை நம்பாதீர்கள்.. இயக்குனர் மோகன் ஜி கருத்தால் பரபரப்பு..!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. இந்த நிலையில் இந்த படத்தை முழுவதுமாக யாரோ யூடியூபில் வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த படத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் யூடியூபில் தனது படத்தை யாரோ வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ள இயக்குனர் மோகன் ஜி அதன் பிறகு மீடியா குறித்து கூறியிருப்பதாவது.

யாரோ பகாசூரன் திரைப்படத்தை யூடியூப் தளத்தில் பதிவேற்றியுள்ளார்கள்.. அதில் இருக்கும் சில கருத்துக்கள் பார்க்க நேர்ந்தது.. மீடியாவில் உள்ள பலரின் கோர முகம், மோகன் G படம் என்றால் தப்பாக பேசி ஓட விடாமல் செய்து விட வேண்டும் என்று முடிவெடுத்து அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள்

மீடியாவை நம்பாமல், நல்ல படங்களை கொண்டாட வேண்டிய நேரத்தில் கொண்டாடுங்கள் என மக்களை தாழ்மையான கேட்டு கொள்கிறேன்.. நல்ல கருத்து தாமதமானாலும் மக்களிடம் சென்றடைவது மகிழ்ச்சி.. அடுத்த படைப்பில் மீடியா கருத்துக்களை நம்பாமல் எங்களுக்கு ஆதரவு அளியுங்கள் மக்களே

Edited by Siva