வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (15:26 IST)

சில்லிட வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளால் கவனம் ஈர்த்த மிஷன் இம்பாசிபிள்- ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்து தொடர்ந்து வெளியாகி வரும் பட வரிசை ‘மிஷன் இம்பாசிபிள்’. 1996ல் மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் வெளியான நிலையில் இதுவரை மொத்தம் 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது.  அனைத்து பாகங்களுமே ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு புல் மீல்ஸ் விருந்தாக அமைந்தது.

இந்த படங்களின் சிறப்பம்சமே இந்த படங்களில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளை டாம் க்ரூஸ் சொந்தமாகவே செய்வதுதான். இந்நிலையில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் கடைசி பாகங்களாக மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங் பாகம் 1 மற்றும் 2 என இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், இந்த படத்தின் ஒரு பிரம்மாண்டமாக ஆக்‌ஷன் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது ஏழாம் பாகம் ஜுலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிஷன் இம்பாசிபிள் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.