1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (19:25 IST)

திரிஷா விவகாரம் குறித்து மிஸ்கின் கருத்து!

முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக  ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் நடிகை திரிஷா பற்றி பேசியிருந்தார்.  இது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிஷா விவகாரம் தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக  ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் நடிகை திரிஷா பற்றி பேசியிருந்தார். இது திரைத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு, ஏ.வி.ராஜூ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரிஷா பதிவிட்ட நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து, ஏ.வி.ராஜூ மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
 
அவரது பேச்சுக்கு நடிகரும் ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் ஒரு ஆடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்த நிலையில்,  தென்னிந்திய நடிகர் சங்கமும் முன்னாள் அதிமுக  நிர்வாகி ஏ.வி.ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.
 
கூவத்தூர் விவகாரத்தில் தன்னையும், திரிஷாவையும் தொடர்புபடுத்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி  சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம்   நடிகர் கருணாஸ் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிஷா விவகாரம் தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதில், பெண்களை அவமதிப்பவன் ஆண்மகன் அல்ல. ஒரு நடிகை குறித்து சுலபமாக பேசிவிடாதீர்கள்; 2 முறைதான் திரிஷாவை  நான் பார்த்துள்ளேன். அவர் மிகவும் எளிமையான பெண் என்று தெரிவித்துள்ளார்.