அதுக்குள்ள குழந்தையே பொறந்துடுச்சா? புகைப்படத்துடன் ஷாக் கொடுத்த மியா ஜார்ஜ்!

Papiksha Joseph| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (20:00 IST)

தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மோகன்லால் ,மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்கள் படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெறுள்ளார்.
கடைசியாக சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள
"கோப்ரா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் அஸ்வின் பிலிப் என்பவருடன் கடந்த மே மாதம் மியா ஜார்ஜூக்கு திருமணம் நடைபெற்றது. அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை சீக்ரட்டாக வைத்திருந்த மியா தற்போது குழந்தையும் கையுமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எல்லோருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இப்போதானமா கல்யாணமே ஆச்சு அதுக்குள்ள குழந்தையாக என அவரது கல்யாண தேதியை மீண்டும் ஒருமுறை கூகுள் செய்து பார்த்துள்ளனர் ரசிகர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :