1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (18:43 IST)

கோபப்படும் சமந்தா

திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா?’ என்று கேட்டால், எக்கச்ச கோபம் வருகிறதாம் சமந்தாவிற்கு.
 


 

அக்டோபர் மாதம் நாக சைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர, விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மற்றும் இரண்டு தெலுங்குப் படங்கள் கைவசம் உள்ளன. எனவே, அவற்றை அவசரம் அவசரமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.

‘அப்படியானால், திருமணத்திற்குப் பிறகு சமந்தா நடிக்க மாட்டாரா?’. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டால், சுள்ளெனக் கோபம் வருகிறது. ‘இதே கேள்வியை ஒரு டாக்டரிடமோ, இன்ஜினீயரிடமோ கேட்பீர்களா?’ என்று கேட்பவர்களிடம் கோபப்படுகிறாராம் சமந்தா.