புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (20:10 IST)

மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் – இந்த படத்தின் காப்பியா ?

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் அது ஹோம்லேண்ட் எனும் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் கருப்பு உடையில் சிறுவர்கள் பலர் முன்னோக்கி செல்ல திரும்பி பார்க்கும் விஜய் வாயில் கைவைத்து எச்சரிப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் போஸ்டரை பரவலான பாராட்டித் தள்ள ஹோம்லேண்ட் என்ற படத்தின் போஸ்டரின் காப்பிதான் இது என்பது கண்டுபிடுத்தனர் நெட்டிசன்கள்.

ஏற்கனவே வெளியான முதல் லுக் போஸ்டரும் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் திரைப்படம் சைலன்ஸ்டு என்ற கொரிய படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது.