திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 29 ஜூலை 2017 (15:36 IST)

மணிரத்னத்தின் அடுத்த படம்தான் என்ன?

மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் வெளியாவதால், ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.


 

 
‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் என்ன படத்தை இயக்கப் போகிறார் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ராம் சரண் – அரவிந்த் சாமியை வைத்து ‘தளபதி 2’ படத்தை இயக்கப் போகிறார் என்றும், ‘காற்று வெளியிடை’ ஹீரோயின் அதிதி ராவ் அதில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல் வெளியானது. பின்னர், அதுவே மாதவன் – ஃபஹத் ஃபாசில் என மாறியது.

அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில், வேறொரு ஸ்கிரிப்ட்டையும் அவர் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சைஃப் அலிகான் மகள் சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கலாம் என்கிறார்கள். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கும் ஒன்லைன் சொல்லியிருக்கிறாராம் மணிரத்னம். விஜய் சேதுபதிக்கு அந்த ஒன்லைன் ரொம்பப் பிடித்திருந்தாலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவர் கால்ஷீட் டைரி நிரம்பி இருக்கிறது. எப்படியாவது அட்ஜெஸ்ட் செய்து மணிரத்னத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் என்கிறார்கள். இப்படி, மணியின் அடுத்த படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் உலா வருவதால், ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.