1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வெள்ளி, 5 மே 2017 (19:50 IST)

மணிரத்னம் அடுத்து இயக்கும் படம் - கசிந்த தகவல்கள்

காற்று வெளியிடை படத்திற்கு பின் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து காற்று வெளியிடை படத்தை இயக்கினார். ஆனால், இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. 
 
இந்நிலையில், அவர் தனது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அவர் அடுத்து நேரிடையாக ஒரு ஹிந்தி படத்தை இயக்குவதாகவும், அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்க வாய்ப்பிருபப்தாக சிலர் கூறுகிறார்கள். 
 
ஆனால், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து அவர் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் முன்பே வெளியானது. எனவே, அவரது அடுத்த படத்தில் இடம் பெறும் நடிகை, நடிகர்கள் பற்றிய விபரங்கள் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது.