புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (16:30 IST)

தாய்லாந்து செல்லும் மணிரத்னம் – விரைவில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் !

பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக மணிரத்னம் தாய்லாந்துக்கு தனது படக்குழுவோடு செல்ல இருக்கிறார்.

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனக்கென தனி பாணியை கொண்டிருப்பவர் மணிரத்னம். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. இதற்காக அவர் இரண்டு முறை முயன்று ஆனால் அப்போது கைகூடாமல் போனது. கடைசியாக “செக்க சிவந்த வானம்” திரைப்படத்தை முடித்த பின்னர் பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிக, நடிகையரை தேர்வு செய்யும் பணியில் இறங்கினார். பல முக்கியமான நடிகர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதியாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், அமலாபால் உள்ளிட்ட ஒரு நடிக பட்டாளமே ஒப்பந்தமாகி உள்ளனர்.

இந்நிலையில் 6 மாத காலமாக படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளார். பொன்னியின் செல்வன் கதை முக்கியமான காட்சிகள் அடர்ந்த் வனப் பகுதிகளில் நடைபெறுவதால் அவற்றுக்காக தாய்லாந்தில் உள்ள காட்டுப்பகுதிகளை மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் நடிகைகள் அனைவரிடமும் இதை சொல்லி மொத்தமாக 100 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கேட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் தாய்லாந்து செல்லும் படக்குழு ஒரேக் கட்டமாக படப்பிடிப்பை முடிக்க உள்ளது.