வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 மே 2022 (09:43 IST)

சல்மான் கான் படத்துல ‘மாஸ்டர்’ மாளவிகாவா? அவரே அளித்த விளக்கம்!

சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படம் தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் பூஜா ஹெக்டே. அதையடுத்து இப்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அடுத்து  சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதை உறுதி செய்து, அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்துக்கு ’கபி எய்ட் கபி தீவாளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கூடுதலாக பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். வெங்கடேஷ் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தி சினிமாவில் இந்த படத்தின் மூலமாக ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மை இல்லை என்று மாளவிகா டிவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.